குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தலைவராவதில் எந்த தவறும் இல்லை. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

குஷ்பு காங்கிரஸ் கட்சியின் தலைவராவதில் எந்த தவறும் இல்லை. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

kushbooதமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவர் யார்? என்ற கேள்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து வந்த குஷ்பு, அடுத்த தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் குஷ்பு காங்கிரஸ் தலைவராவதில் எவ்வித தவறும் இல்லை என்று இளங்கோவன் கூறி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார

குஷ்பு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர். அதுமட்டுமின்றி ஆங்கிலம், இந்தி மொழிகள் அவருக்கு சரளமாக தெரியும் என்பதால் மேலிட தலைவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மொழி பிரச்சனை இருக்காது. எனவே அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கலாம். தமாகா பிரிந்து சென்றபோது குஷ்பு காங்கிரஸுக்கு வந்தார். அவரை வைத்து பல பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் நடந்துள்ளன. மக்கள் பெருமளவில் கூடினர். குஷ்பு வந்ததால்தான் தமிழக காங்கிரஸை மக்கள் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். எனவே அவரை தலைவராக்குவதில் தவறில்லை என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், வசந்தகுமார் போன்ற தலைவர்களும் காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க முயற்சித்து வரும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி ஊடகங்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

Leave a Reply