நான் இருக்கும் வரை இதெல்லாம் நடக்க விடமாட்டேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் எச்சரிக்கை
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன் பூட்டிக் கிடந்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா அறையை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு விரைந்து வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவரை கண்டித்ததாகவும்,
‘அறையை உடைக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? நான் இருக்கும்வரையில் அப்படி எதுவும் நடக்கவிட மாட்டேன். புதிய தலைவரை மேலிடம் நியமனம் செய்யட்டும். அதன்பிறகு யாருக்கு அறை ஒதுக்குவது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இனியொரு முறை இவ்வாறு நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்’ எனக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் காங்கிரஸ் அலுவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.