முதல்வர் ஜெயலலிதாவை நலம் விசாரிக்க சென்ற ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை மத்திய மாநில அமைச்சர்களும், ராகுல்காந்தி, அமித்ஷா உள்ளிட்ட விவிஐபிகளும் நேரில் அப்பல்லோ வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவுடன் பல வேறுபாடுகள் இருப்பினும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் இன்று அப்பல்லோவுக்கு வருகை தந்து முதல்வரின் நலம் குறித்து விசாரித்தார்.
முதல்வரை சந்திக்க அப்பல்லோ சென்ற இளங்கோவன் பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தபோது ‘முதல்வரின் உடல்நிலை குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரித்தேன். முதல்வர் நலமாக இருப்பதாக கூறுகின்றனர். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறினார்.