ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்

 ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன்

evksபிரதமர் மோடி-முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என தமிழக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கைது நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலக பெண் ஊழியர் வளர்மதி கொடுத்த மிரட்டல் புகாரை அடுத்து அவர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்ய தீவிரமாக இருந்தனர். இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திரமோடி தனிப்பட்ட முறையில் சந்தித்தது தொடர்பாக, தான் பேசியதற்காக முதலமைச்சர் சார்பில் பல்வேறு நீதிமன்றத்தில் பொய்யாக அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெண் ஊழியரை வைத்து, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது பொய்யாக புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளது.

புகார்தாரர் வளர்மதி, கடந்த மார்ச் மாதமே வேலையை விட்டு நீக்கப்பட்டார். இதை எதிர்த்து அந்த ஊழியர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்போதைய அரசியல் காரணத்துக்காக இவரை வைத்து, பொய் புகார் கொடுக்க வைக்கப்பட்டுள்ளார். அந்த புகாரில் சம்பவம் நடந்ததாக கூறும் நாள், நேரம் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நாராயணன், அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி. இந்த புகாருக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு என்பது வயதாகிறது”  என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய திபதி எஸ்.வைத்தியநாதன், “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கினார். அதில்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தங்கியிருந்து, தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில், தினந்தோறும் ஆஜராகி இரண்டு வார காலத்துக்கு கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply