இளங்கோவன் திடீர் டெல்லி பயணம். சோனியா காந்தி அழைத்தாரா?

இளங்கோவன் திடீர் டெல்லி பயணம். சோனியா காந்தி அழைத்தாரா?

EVKS(1)
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இன்று திடீரென இளங்கோவன் டெல்லி கிளம்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இளங்கோவன் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் இளங்கோவன் தன்னை மிரட்டியதாக  சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் இளங்கோவனின் திடீர் டெல்லி பயணம் பல ஊகங்களை எழுப்பியுள்ளது.

ஆனால் இதுகுறித்து இளங்கோவன் கருத்து கூறியபோது, ‘‘கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே திட்டமிருந்தபடி டெல்லி வந்துள்ளதாக’’ தெரிவித்தார்.

Leave a Reply