சிடி விற்றவர் சிஎம் பதவிக்கு ஆசைப்படலாமா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சிடி விற்றவர் சிஎம் பதவிக்கு ஆசைப்படலாமா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சசிகலா முதல்வர் பதவியேற்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருசிலர் ஆதரவாகவும், பலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து கூறியபோது, ”ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., – கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த இடத்தில், ‘சிடி’ விற்றவர் எல்லாம் சிம் ஆக வர முடியாது,” என்ரு கூறியுள்ளார்.

வீட்டில் நல்லது நடக்கும் போது எண்ணெய் கொட்டி விட்டால், அதை அபசகுனம் என, சொல்லி புலம்புகிறோம். இப்போது, சென்னையில், கடல் பரப்பில் எண்ணெய் மிதக்கிறதே; என்ன நடக்கப் போகுதோ? முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, மாற்ற வேண்டிய அவசியம், இப்போது ஏற்படவில்லை.

ஆந்திராவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்; டில்லி சென்று, பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்தார். அப்படி இருக்கும் போது, அவரை மாற்றுவதற்கு இப்போது அவசரம் என்ன? ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., – கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்த இடத்தில், ‘சிடி’ விற்றவர்கள் எல்லாம் சிம் ஆக வர முடியாது. சசிகலா, தனக்கு தானே முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்; தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்று கொள்ள மாட்டர். பணம், பலம் காட்டினாலும், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வியை சந்திக்கும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

Leave a Reply