ஜி.கே.வாசன் வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வோம். இளங்கோவன்

ஜி.கே.வாசன் வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வோம். இளங்கோவன்

evksகடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையவுள்ளதாகவும், இணைப்புக்காக ஜி.கே.வாசன், சோனியா காந்தியை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன

ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜி.கே.வாசன் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இணைப்பு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ‘காங்கிரஸ் கட்சியுடன் தமாகவை இணைக்க ஜி.கே.வாசன் முடிவு செய்தால், அவரை மன்னித்து ஏற்றுக்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜி.கே.வாசனுக்கு காங்கிரஸில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. தங்களது தவறை உணர்ந்து அவர்கள் வருவதாக தெரிவித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

Leave a Reply