பொலிவியா அதிபர் தேர்தல். மீண்டும் அதிபர் இவோ மொரால்ஸ் வெற்றி.

boliviaதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியா என்ற நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இவோ மொரால்ஸ், வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக யூனியன் கட்சியை சேர்ந்த சாமுவேல் டெரியா மெடினா, முன்னாள் அதிபர் ஜோர்ஜி குய்ரோகா உள்ளிட்ட 5 பேர்களும் தோல்வி அடைந்தனர்.

பொலிவியா அதிபர் தேர்தலில் அந்நாட்டில் வாழும் 50 லட்சத்து 97 ஆயிரம் பேரும், அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் ஸ்பெயினில் வாழும் 2 லட்சத்து 72 ஆயிரத்து 58 பேரும் ஓட்டு போட்டனர்.

நேற்று பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் இவோ மொரால்ஸ் 55.18 சதவீதம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. .

எதிர்க்கட்சி வேட்பாளரான சாமுவேல் டெரியா மெடினா 30.07 சதவீத வாக்குகள் பெற்று 2–வது இடத்தையும், முன்னாள் அதிபர் ஜோர்ஜி 11.37 சதவீத வாக்குகள் பெற்று 3–வது இடத்தையும் பிடித்தனர்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அதிபர் மொரால்ஸ்சுக்கு தென் அமெரிக்க நாடுகள் யூனியனின் செக்ரட்டரி ஜெனரல் எர்னஸ்போ சாம்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Leave a Reply