எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியமா?

c6621e0789afa1d0f5db162866b5536a

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை, கிரியைகளை செய்து வந்தார்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஒரு சந்தேகம், கடவுள் காட்சி பெற்ற நம் குருவானவர் ஏன் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை புனஷ்காரங்கள் செய்கிறார். இதைத் தனது குருவிடமே நேரிடையாகவே கேட்கவும் செய்தார்.

“ஸ்வாமி, கடவுள் காட்சி கண்ட தாங்கள் ஏன் இன்னமும் ஜபம், பூஜைஇவற்றில் ஈடுப்பட்டு வருகிறீர்கள்? இவையெல்லாம் ஆரம்பகால ஆத்மா சாதகர்களுக்கு தேவைப்படலாம். தாங்கள் ஏன் செய்கிறீர்கள் என்பதை அறிய விழைகிறேன்” என்றார்.

அதற்கு ஸ்ரீ தோத்தாபுரி, “ஒருநாள் செம்பில் பால் வாங்கிப் பயன்படுத்திவிட்டு கழுவாமல் மறுநாள் அதே செம்பில் பால் வாங்கினால் அந்தப் பால் எப்படி கெட்டு விடுமோ அதுபோல தினசரி பூஜை, கிரியைகளால் மனதிலுள்ள அழுக்கைக் களைய வேண்டும். ஒரு நாள் விட்டாலும் மனதில் அழுக்கு படிந்துவிடும், எனவே எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை போன்ற கிரியைகளை அவசியம்மேற்கொள்ள வேண்டும்” என்று பதில் கூறினார்.

Leave a Reply