8 ஆண்டுகளாக கோமாவில் இருந்த முன்னாள் இஸ்ரேல் பிரதமர் கவலைக்கிடம்

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கோமா நிலையில் இருந்துவரும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷரோன் உடல்நிலை கவலைக்கிடமாக் உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஹஷோமர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது ஏரியல் ஷரோனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதுமுதல் அவர் கோமா நிலையில் இருந்து வருகிறார். எட்டு ஆண்டுகளாக மருத்துவர்களின் சிகிச்சை பராமரிப்பில் இருந்து வரும் அவருக்கு தற்போது ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக முக்கிய உறுப்புகள் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

1982ஆம் ஆண்டு நடந்த லெபனான் படையெடுப்பின்போது ஏரியல் ஷரோன் ராணுவ அமைச்சராக பணியாற்றினார். பின்னர் 2001ஆம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2006ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்து வந்தார்.

1928ஆம் ஆண்டு பிறந்த ஷரோன், 1962ஆம் ஆண்டு மார்கலிட் ஷரோன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Leave a Reply