பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க வீரர் மீது நடவடிக்கையா? பெரும் பரபரப்பு.

Neillஅமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு பழிவாங்கு நடவடிக்கையாக பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்க படை சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. கடந்த 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள  அபோட்டாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கையின்போது, அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் அவரை யார் சுட்டுக்கொன்றது என்கிற விபரத்தை அமெரிக்க அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ரகசியமாக வைத்திருந்தது.

ஆனால் ராபர்ட் ஓ’நீல்  என்ற 38 வயது அமெரிக்க ராணுவ வீரர், இந்த முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ நடவடிக்கை குறித்தும், அதில் பங்கேற்ற தனது அடையாளத்தையும் இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ராணுவ நடவடிக்கை அமெரிக்க கடற்படை சிறப்பு அதிரடிப்படையின் (சீல்) 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்தான் ஒசாமா பின் லேடன் தலையில் மூன்று முறை சுட்டவர் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

புகழுக்காகவும், பணத்துக்காகவும் ராணுவ ரகசியங்களை சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் வெளியிட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அமெரிக்க அரசு எச்சரித்திருக்கும் நிலையில் புகழுக்காக இந்த ரகசியத்தை வெளியிட்ட ராபர்ட் ஓ நீல் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது.

Leave a Reply