தேர்வு எழுதிய அடுத்த நிமிடமே ரிசல்ட். சென்னை பல்கலை. அடுத்த ஆண்டு அறிமுகம்

தேர்வு எழுதிய அடுத்த நிமிடமே ரிசல்ட். சென்னை பல்கலை. அடுத்த ஆண்டு அறிமுகம்

madras universityதற்போதைய காலகட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் அதன் முடிவை தெரிந்து கொள்ள ஒரு வாரம் ஒரு மாதத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை உள்ளது. வளர்ந்து வரும் டெக்னாலஜியின் அனைத்துமே உடனுக்குடன் கிடைக்கும் நிலையில் ரிசல்ட்டுக்காக மட்டும் ஏன் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்ற யோசனை செய்ததின் விளைவாக தேர்வு எழுதி முடித்த அடுத்த நிமிடமே ரிசல்ட் கிடைக்கும் வகையில் சென்னை பல்கலை திட்டமிட்டுள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கு உட்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆப்ஜெக்டிக் டைப்பில் கேள்விகள் கேட்கப்படும். அதாவது ஒரு கேள்விக்கு நான்கு விடைகள் கொடுத்து அதில் சரியானவற்றை தேர்வு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் மாணவர்களல் எழுதப்படும் இந்த தேர்வை எழுதி முடித்த அடுத்த நிமிடமே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அதாவது தேர்வு அறையை விட்டு வெளியே வரும்போதே அவர்களது மதிப்பெண் தெரிந்து விடும்.

சென்னை பல்கலையில் சோதனை அடிப்படையில் இந்த தேர்வு முதலில் நடத்தப்படவுள்ளதாகவும், இந்த முறை வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்வுகளும் படிப்படியாக ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் தெரிகிறது.

Leave a Reply