பெட்ரோல் விலை குறைக்காமல் சதி செய்யும் மத்திய அரசு?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தபோதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அந்த அளவிற்கு குறையவில்லை நாள் ஒன்றுக்கு 10 காசு, 15 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது. உண்மையில் பெட்ரோல் விலை 20 ரூபாய்க்கும் மேல் குறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ 3 உயர்த்தப்படுவதாகவும், கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் இருப்பதாகவும் அதிர்ச்சிதரும் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த நடவடிக்கையால் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைப்பை மக்கள் அனுபவிக்க விடாமல் தடுத்ததோடு தற்போது கலால் வரியையும் உயர்த்தி மத்திய அரசு சதி செய்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.