தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: யாருக்கு வெற்றி
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடந்ததை அடுத்து 6 மணிக்கு மேல் ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிடலாம் என அறிவித்தது.
இந்நிலையில் தந்தி டிவி தனது கருத்துக்கணிப்பை வெளியிட்டது. இதன்படி இந்த தேர்தலில் அதிமுக 102, திமுக 69, காங்கிரஸ் 10, பாமக 1, இழுபறி 52 என அறிவித்துள்ளது. இழுபறியான 52 தொகுதிகள் யாருக்கு செல்கின்றதோ அவர்களே ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும் என தந்தி டிவி அறிவித்துள்ளது.
இருப்பினும் இழுபறியான 52 தொகுதிகளில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே அதிமுக ஆட்சி அமைத்துவிடும். அதே நேரத்தில் இழுபறியான 52 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே திமுக ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் அதிமுகவே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியா டுடே, நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ் மற்றும் ஏபிபி ஆகிய நிறுவனங்கள் அதிமுக பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.