121 அடி நீளமுள்ள உயிரினத்தின் எலும்புத்துண்டுகள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிப்பு
உலகில் வாழ்ந்த உயிரினங்களில் இதுவரை டைனோசர்கள் மட்டுமே மிகப்பெரிய விலங்கு என்று இருந்த நிலையில் தற்போது டைனோசர்களை விட மிகப்பெரிய விலங்குகளின் எலும்பு துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Titanosaur என்று கூறப்படும் இந்த விலங்குகள் 121 அடி நீளம் உடையதாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அர்ஜெண்டினா நாட்டில் Sir David Attenborough என்பவர் தலைமையிலான தொல்பொருள் ஆய்வாளர்கள் சமீபத்தில் மிகப்பெரிய Titanosaur எலும்பு துண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த எலும்புத்துண்டை வைத்து ஆய்வு செய்தபோது, இந்த விலங்கினம் சுமார் 37 மீட்டம் நீளம் உடையது என்றும் இந்த விலங்கு சுமார் 102 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
70 மெட்ரிக் டன் எடையுடன் வாழ்ந்த இந்த Titanosaur 14 ஆப்பிரிக்க யானையின் எடைக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த உயிரினம் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.