கூலர்ஸ் ஃபேஷனா? பாதுகாப்பா?

p25

கண் விழித்திரை பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண் நன்றாகத் தெரிவதுபோலத் தோன்றும். ஆனால், ஒரே நேர் கோட்டில்தான் அவர்களால் பார்க்க முடியும். சுற்றிலும் உள்ளவை மங்கலாகிவிடும். பிரச்னை பெரிதாகும்போதுதான், அதற்கான அறிகுறிகள் தெரியவரும். இந்தப் பிரச்னைக்கு  தீர்வு கிடையாது. வராமல் தடுக்கத்தான் முடியும். பலர், ஸ்டைலுக்கு ஒன்று, பைக் ஓட்ட ஒன்று, செல்ஃபிக்கு ஒன்று என தரமற்ற கண்ணாடிகளை வாங்கிக் குவிக்கின்றனர். ஸ்டைலுக்கு அவர்கள் கொடுக்கிற முக்கியத்தை, கொஞ்சம் ஆரோக்கியத்துக்கும் கொடுக்க வேண்டும்.  

கூலிங் கிளாஸ் எப்படி தேர்ந்தெடுப்பது?

கூலிங் கிளாஸ் அடர் நிறத்தில் இருந்தாலே அது நல்லது என்ற எண்ணம் உள்ளது. இது தவறானது. தரமான கண்ணாடிகளில், புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும், தடுப்பு இருக்கும். சாலையோரங்களில் விற்கப்படும் கண்ணாடிகளில் அது இருக்கும் என்று சொல்ல முடியாது. அதிகமான வெளிச்சத்தின்போது கண்ணின் மணி சுருங்கி, ஒளியைக் குறைவாக அனுப்பும். ஆனால்,  கூலிங் கிளாஸ் அணியும்போது கண்ணில் உள்ள கண்ணின் மணி நன்கு விரிந்து ஒளியை உள்ளே அனுப்பும்.

புறஊதாக் கதிர்வீச்சுத் தடுப்பு இல்லாத கண்ணாடியை அணியும்போது, அதிக அளவில் புறஊதாக் கதிர்கள் உள்ளே செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் கண் நரம்புகள் பாதித்து, பார்வை முழுவதுமாகப் பறிபோய்விடும்.  நரம்பு பாதிப்பினால் பார்வை போனால்,  பிறகு அதைச் சரிசெய்யவே முடியாது. எனவே கூலிங் கிளாஸ் 99 அல்லது 100 சதவிகிதம் யு.வி. கதிர்வீச்சைத் தடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

கூலிங் கிளாஸ் ‘தலைவலி’?

கூலிங் கிளாஸாக இருந்தாலும், அதில் ‘பவர்’ இருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. கண் சரியாகத் தெரியாததால் போடுகிற கண்ணாடியில் அவரவர் கருவிழிக்கு ஏற்றாற் போல் லென்ஸ் கொடுத்திருப்போம். அந்த லென்ஸ் வழியாக மட்டும்தான் பார்க்க வேண்டும் என்பதற்காக, அதனை பிரத்யேகமாகச் செய்வோம். ஆனால், தரமற்ற கூலிங் கிளாஸில், பவர் இருந்து, அதன் வழியாகப் பார்த்தால் தலைவலி ஏற்பட்டு, பார்வை மங்கலாகும்.

p25a

சாலையோரக் கடைகளில் கிடைக்கும் கண்ணாடிகளில் கூலிங்குக்காக சில கோட்டிங் பயன்படுத்துவார்கள். பிறகு, கையில் கிடைக்கும் துணியால் கண்ணாடியைத் துடைக்கும்போது, அந்த கோட்டிங் போய்விடும்.  மேலும், கண்ணாடியில் கீறல் விழும். சிலர், சின்ன ஃப்ரேம் இருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்துகின்றனர். சின்ன ஃப்ரேம் மூலமாக மேலும், கீழும் பார்க்க நேரிடுகையில், அந்த மாறுதலை அவர்களது கண்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஒளி வேறுபாடும் கண் நரம்புகளைப் பாதிக்கும்.

கூலிங் கிளாஸ் உடைந்தால்?

தரமற்ற கூலர்ஸில் கிளாஸ்களின் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும். விபத்து நடந்தால் கண்ணாடி உடைந்து கண்ணாடித் துகள்கள் கண்ணுக்குள் போய்விடும். அதன் பிறகு, கண் பார்வை தெரிவதற்கு இரண்டு சதவிகிதம்தான் வாய்ப்பு இருக்கிறது.

கண்களுக்கு ஏற்ற தரமான கூலிங்கிளாஸைப் பயன்படுத்துவது மட்டுமே பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழி.

லென்ஸ் கவனம்

கண்களைப் பாதிக்கும் இன்னொரு விஷயம் லென்ஸ். லென்ஸுக்காகக் கொடுக்கப்பட்ட சொல்யூஷனைத்தான் பயன்படுத்த வேண்டும். தண்ணீரோ, வேறு சொல்யூஷனோ பயன்படுத்தக் கூடாது.

p26

8 முதல் 10 மணி நேரம் வரைதான் கண்களில் லென்ஸ் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால், கிருமித் தொற்று ஏற்படலாம்.

லென்ஸை அணிந்துகொண்டே தூங்குவதாலும், கண்களில் கிருமி பரவி, கட்டி, கண்ணீர், உறுத்தல்கள் வர வாய்ப்பு அதிகம்.

கண்களில் லென்ஸ் அணிந்துகொண்டு மருந்து ஊற்றக் கூடாது.

முடிந்தவரை அதிக தூசி உள்ள பக்கம் செல்லக் கூடாது. ஏனெனில், கண்களில் தூசிபட்டு, அதைத் துடைக்கும்போது லென்ஸுக்குப் பாதிப்பு ஏற்படும்.

அதிகம் கணினி பயன்படுத்துவோர், ஆன்்டி ரிஃப்லெக்டிங் கோட்டிங்கைப் பயன்படுத்தலாம். அது கணினியிலிருந்து வரும் ஆபத்தான கதிர்களைக் கண்களுக்குள் அண்டவிடாது.

டூவீலர்கள் பயன்படுத்துவோர் போலரைஸ்டு கூலிங் கிளாஸ் வகைகளைப் பயன்படுத்த வேண்டும். அது அனைத்துத் திசைகளிலிருந்தும் வரும் ஒளியின் தாக்கத்தைக் குறைத்து கண்களுக்கு அனுப்பும்.

Leave a Reply