கண் பார்வையற்றோருக்கு பிரத்யேக ஸ்மார்ட்போன்கள்

iPhone_main-350x250

கண் பார்வையற்றவர்களும் ஸ்மார்ட்போன்களை உபயோகப்படுத்தும் வகையில் புதிய மொபைல் தொழில்நுட்பத்தை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். லண்டனில் உள்ள லிங்கன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஷன் மற்றும் மெஷின் லேர்னிங் துறை அறிவியல் நிபுணர்கள் இது பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சிக்கு கூகுள் நிறுவனம் நிதியுதவி அளித்து வருகிறது.

கண் பார்வையற்றவர்களுக்கு உதவும் ஸ்மார்ட் விஷன் சிஸ்டம் என்ற நவீன தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் பயன்படுத்தி சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, எதிர்வரும் ஆராய்ச்சியில் கலர் மற்றும் டெப்த் சென்சார் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் வாயிலாக, முப்பரிமான வரைபடங்கள், வழிகாட்டி மற்றும் ஐகான்களை பார்வையற்றவர்கள் உணர முடியும். இதனுடன், வைப்ரேஷன், சவுண்ட் மற்றும் ஸ்போக்கன் வேர்டு தொழில்நுட்பங்களும் இணைக்கப்படுவதால் கண் பார்வையற்றவர்களுக்கு ஏற்ற மொபைல் இண்டர்பேஸூம் உருவாக்க முடியும். இதற்காக தீவிர முயற்சியில் ஆராய்ச்சியாளர் நிகோலா பெலோட்டோ தலைமையிலான விஞ்ஞானிகள் குழு களமிறங்கியுள்ளது.

ஏற்கனவே, கண் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில், கைடு டாக்ஸ், கேமராக்கள் மற்றும் கைகளில் அணிவது போன்ற சென்சார் கருவிகள் இருந்தாலும் அவற்றை எல்லோராலும் வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. இந்நிலையில், ஆராய்ச்சியாளர்களின் இந்த பிரத்யேக ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் கண் பார்வையற்றவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

Leave a Reply