இன்று ஃபேஸ்புக்கின் 10 வது பிறந்தநாள்.

அமெரிக்காவை சேர்ந்த மார்க் ஜூகர்பெர்க் கடந்த 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதிதான் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை தொடங்கினார். இன்று ஃபேஸ்புக் தனது பத்தாவது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடுகிறது.

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த மார்க், சக மாணவர்களிடையே ஒரு உறவை ஏற்படுத்த ஒரு இணையதளத்தை தொடங்கினார். அதுதான் ஃபேஸ்புக் இணையதளம். மிகக்குறுகிய உறுப்பினர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஃபேஸ்புக்கில் இன்று உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 120 கோடியை தாண்டிவிட்டது. இது இந்தியாவின் ஜனத்தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் 53 மில்லியன் டாலராக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டே அதாவது 2013ஆம் ஆண்டே அதன் வருமானம் இருமடங்காக அதிகரித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் ஃபேஸ்புக் தனது 80 சதவிகித வாடிக்கையாளர்களை இழந்துவிடும் என பிரின்ஸ்டன் பலகலைக்கழகம் தனது ஆய்வில் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply