பேஸ்புக் சமூக வலைத்தளம், உலகின் முன்னணி வலைத் தளமாக விளங்கி வருகிறது. இதில் கருத்துகள், படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் வெளியிட முடியும். ஆனால் பக்கம் பக்கமாக வெளியிடப்படும் கட்டுரைகளைவிட, சில வரிகளில், படங்களுடன் வெளியிடப்படும் கருத்துகள் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் ஆய்விலும், அனுபவத்திலும் உணர்ந்தனர். எனவே சுருக்கமான உரையாடல் வலைத்தளமாக விளங்கும் டிவிட்டருக்கு போட்டியாக, புதிய வலைத்தளத்தை உருவாக்கி வருகிறது பேஸ்புக்.
‘ஆல்பா’ எனப்படும் அந்த அப்ளிகேசன், 100 வார்த்தைகளுக்குள் உரையாடும் வலைத்தளமாக விளங்கும். அத்துடன் உடனுக்குடன் நடக்கும் செய்திகளையும் இதில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இது கருத்து பகிர்தலுக்கு மிகவும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பரிசோதனை முயற்சிகள் நடந்து வருகின்றன.