ஃபேஸ்புக்கை நாங்கள் தான் முடக்கினோம். பிரபல ஹேக்கர் குரூப் அறிவிப்பு.

facebookஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நேற்று சுமார் அரைமணி நேரம் முடங்கியது. இதற்கு ஹேக்கர்களின் கைவரிசையே காரணம் என செய்திகள் கூறுகின்றன.

ஃபேஸ்புக் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் இணையதளமும் நேற்று முடங்கியது. இந்நிலையில் லிசார்ட் குரூப் என்ற ஹேக்கர் குழு, ‘ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இணையதளங்களை முடக்கியது தாங்கள்தான் என டுவிட்டரில் பகிரங்கமாக அறிவிப்பு செய்தது.

ஆனால் இந்த கருத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ள விளக்க அறிக்கை ஒன்றில், ‘”இது வெளியிலிருந்து யாரும் செய்த வேலை அல்ல. எங்கள் மென்பொருள் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட சிறு மாறுதலால் நிகழ்ந்தது. தற்போது இரண்டு தளங்களும் 100 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது” என்று கூறியுள்ளது.

ல கோடி பயனர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் அரைமணி நேரம் முடங்கியதால் இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் உள்ள அதன் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply