கடவுள் சிலை படத்தை நீக்க கூறிய ஃபேஸ்புக் நிர்வாகம். பயனாளி அதிருப்தி

கடவுள் சிலை படத்தை நீக்க கூறிய ஃபேஸ்புக் நிர்வாகம். பயனாளி அதிருப்தி


ஃபேஸ்புக் பயனாளி ஒருவர் பதிவு செய்த கடவுள் சிலை புகைப்படத்தை நீக்கும்படி ஃபேஸ்புக் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் பயனாளிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியை சேர்ந்த கலை வரலாற்று ஆசிரியர் எலிகா பற்பரி என்பவர் ரோமானியர்களின் கடல் கடவுளாக ‘நெப்டியூன்’ சிலையின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து அதுகுறித்த பாரம்பரிய கதைகள், புதுமைகள் என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆனால் இந்த சிலையின் தோற்றம் ஆபாசமாக இருப்பதாக ஃபேஸ்புக் நிர்வாகம் கருத்து தெரிவித்ததோடு உடனே அந்த சிலை படத்தை நீக்கும்படி கேட்டுக்கொண்டது.

ஃபேஸ்புக் நிர்வாகம் கேட்டுக் கொண்டதை அடுத்து பேஸ் புக் இணையதளத்தில் நெப்டியூன் கடவுள் சிலை படத்தை எலிகா நீக்கிவிட்டார். பின்னர் இது குறித்து எலிசா பார்பரி ‘பேஸ்புக்’ இணையதளத்தில், ‘ஆடையுடன் கூடிய நெப்டியூன் சிலையை பேஸ்புக் மறு படியும் உருவாக்கட்டும்’ என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply