டிரம்ப் வெற்றிக்கு ஃபேஸ்புக் காரணமா? திடுக்கிடும் தகவல்
உலகின் பல்வேறு கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதை இன்னும் பலர் நம்பவில்லை. ஆனால் இந்த வெற்றிக்கு ஃபேஸ்புக் ஒரு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
உலகின் நம்பர் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ஹிலாரிக்கு எதிராகவும், டிரம்புக்கு ஆதரவாகவும் பல்வேறு போலியான கதைகளை வெளியிட்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ஹிலாரி கிளிண்டன் சட்டத்திற்கு புறப்பாக 137 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் வாங்கியுள்ளார் என்றும், மாலத்தீவில் கணவன்-மனைவி இருவரும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டினை வாங்கியுள்ளனர் என்பது போன்ற கட்டுக்கதைகளை ஃபேஸ்புக் அனுமதித்துள்ளது என்று கூறியுள்ளது.
அதேபோல் டிரம்ப் குறித்து பல பாசிட்டிவ் கருத்துக்கள் பதிவானதாகவும் இதன் காரணமாக டிரம்புக்கு கடைசி நேரத்தில் ஓட்டு போட பலர் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.