திடீரென ஆயிரக்கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியது ஏன்?

திடீரென ஆயிரக்கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியது ஏன்?

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், திடீரென ஆயிரக்கணக்கான கணக்குகளை முடக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதன் பயனாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பிரிட்டனில் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் குறித்து பொய்யான வதந்திகள் ஃபேஸ்புக் மூலம் அதிகம் பரப்பப்படுவதாக வெளிவந்த செய்தியை அடுத்து வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பதாக கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான பிரிட்டன் பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் திடீரென முடக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் வதந்திகள் பரப்பாத அப்பாவிகளின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறியபோது, ‘பொய்யான செய்திகளைப் பரப்பும் பதிவுகளை தானாகவே கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள தவறுகள் காரணமாக அவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply