மும்பை ஐஐடியில் படித்த ஆஸ்தா அகர்வால் என்ற மாணவிக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இவருக்கு வருடத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் ஃபேஸ்புக் நிறுவனம் தர முன்வந்துள்ளது.
மும்பை ஐஐடி மாணவி ஆஸ்தா, மும்பை ஐஐடியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். கம்ப்யூட்டர் சயன்ஸ் டிகிரி படிக்கும் 20 வயது ஆஸ்தா, கடந்த மே மாதம் கலி போர்னியாவில் உள்ள பேஸ்புக் தலைமை யகத்தில் “இன்டர்ன் ஷிப்” என்ற பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார். இந்த பயிற்சியில் அவரது திறமையை அறிந்த பேஸ்புக் நிறுவனம், அவரை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாணவி ஆஸ்தா அகர்வால் கூறியதாவது, “எனக்கு கிடைத்துள்ள இந்த வேலை மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. “இன்டர்ன்ஷிப்பில்” எனது பணியில் திருப்தியடைந்ததால்தான் இந்த வாய்ப்பை பேஸ்புக் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. எனது படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆண்டு அக்டோபரில் பணியில் இணைவேன் என்றார்.
ஆஸ்தாவின் அப்பா அசோக் அகர்வால், ராஜஸ்தான் மாநில மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்தாவின் சகோதரி கெமிக்கல் இன்ஜினீயராக உள்ளார்.