உலக அளவில் 1.32. பில்லியன் பயனாளிகளை கொண்டிருக்கும் பேஸ்புக் இணையதளம் சில நிமிடங்கள் முடங்கியதற்காக அவசர போலீஸின் உதவியை நாடியுள்ளனர் அமெரிக்க மக்கள். இதுகுறித்த ஒரு சுவாரசிய செய்தி.
நேற்று மதியம் சுமார் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளிலும் பேஸ்புக் இணையதளம் தொழில்நுட்ப காரணங்களால் இயங்கவில்லை. இதனால் அமெரிக்காவில் உள்ள பல ஃபேஸ்புக் பயனாளிகள் உடனடியாக 911 என்ற அவசர எண்ணை அழைத்து ஃபேஸ்புக் இணையதளம் இயங்கவில்லை என்றும் உடனடியாக எங்களூக்கு உதவும்படியும் கேட்டுக்கொண்டனர்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான அழைப்புகள் 911க்கு அடுத்தடுத்து வந்ததால், லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அதிகாரி பர்டன் பிரிங்க் அவர்கள் டுவிட்டரில் ஒரு செய்தியை வெளீயிட்டார். அதாவது “பேஸ்புக் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்ல, இதற்காக எங்களை அழைக்காதீர்கள்’ என குறும்பதிவு சேவையான ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கும் நிலை ஏற்பட்டது. பேஸ்புக் எப்போது சரியாகும் என தெரியாது” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சில நிமிடங்களில் ஃபேஸ்புக் இணையதளத்தின் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டுவிட்டு வழக்கம்போல இயங்கியது. இருப்பினும் ஃபேஸ்புக்கிற்கு இளைஞர்கள் உள்பட பல மில்லியன் கணக்கானோர் அடிமையாக இருப்பதை மறுக்க முடியாது.