ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கல்ஸ் – இந்தியாவில் அறிமுகம்..!

images (1)

கூகுள் நியூஸில் செய்திகளை படிப்பதை விட, ஃபேஸ்புக்கில் தான் மக்கள் அதிகம் செய்திகள் வாசிக்கிறார்கள் என்ற புரிதலின் கீழ் ஃபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய பீச்சர் தான் – ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கல்ஸ்.

ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கல்ஸ் ஆனது இந்தியாவில் உள்ள ஆண்ராய்டு பயனாளிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இந்தியாவில் உள்ள ஆண்ராய்டு பயனாளிகள் தங்களின் ஃபேஸ்புக் ஆப் மூலம் உடனுக்குடன் செய்திகளை ப்ராவுஸ் செய்ய முடியும்.

இதில் பிரசுரமாகும் செய்திகள் மிகவும் வேகமாக லோடு ஆகும் ஏனெனில் விருப்பட்ட செய்தியை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் ஆப்பை விட்டு வெளியே செல்ல மாட்டீர்கள் ஆப்பின் உள்ளேயே நீங்கள் செய்திகள் வாசிக்கலாம். Show Thumbnail

மேலும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்ட செய்திகளுக்கும், ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கல்ஸ் செய்திகளுக்கும் வித்தியாசம் கண்டு கொள்ளும்படியாக இன்ஸ்டன்ட் செய்திகளின் மேல் வலது மூலையில் மின்னல் போன்ற குறியீடு தோன்றும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. 

ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்டிக்கல்ஸ் மூலம் வாசகர்கள் 10 மடங்கு வேகமாக செய்திகளை படிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

மேலும் ஃபேஸ்புக்கின் பதிப்பு பங்குதாரர்கள் ஆடியோ கேப்ஷன்ஸ், ஆடோ-ப்ளே வீடியோஸ், இமேஜஸ், மற்றும் மேப்கள் ஆகிய சுவாரசியங்களை இணைத்து செய்தி கதைகளை வெளியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்ப்ரஸ், தி க்வின்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஆஜ் டக் ஆகிய செய்தி நிறுவனங்களோடு ஃபேஸ்புக் நிறுவனம் இணைந்து செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply