வேலைக்காரன்: முதலாளி நீங்கள் அலுவலகத்தில் சிங்கம் மாதிரி இருக்கின்றீர்கள். வீட்டில் எப்படி?
முதலாளி : வீட்டிலும் நான் சிங்கம்தான். ஆனால் என்னுடைய முதுகில் கடவுள் துர்கா உட்கார்ந்திருப்பார்.
கணவன்: இன்று எனக்கு அலாவுதீன் விளக்கு கிடைத்தது.
மனைவி: வாவ், நீங்கள் எனக்காக அந்த விளக்கிடம் என்ன கேட்டீர்கள்
கணவன்: என் மனைவிக்கு இப்போது உள்ள அறிவைப்போல் பத்து மடங்கு அறிவு வேண்டும் என்று கேட்டேன்.
மனைவி: சூப்பர் , அப்புறம் என்ன நடந்தது.
கணவன்: எனக்கு தெரியும். ஜீரோவை எத்தனை மடங்காக பெருக்கினாலும் அதன் மதிப்பு மாறாது என்று.
கணவன் தன்னுடைய திருமண நாளில் மனைவிக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தான். மனைவி அதை வாங்கிவிட்டு ஆறு மாதங்களாக பேசவே இல்லையாம். ஏன் வைர நெக்லஸ் போலியா? இல்லை கணவனின் வேண்டுகோளே அதுதான்