மெதுவான இண்டர்நெட் கனெக்சன் பிரச்சனையை தீர்க்க ஃபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய ஆப்ஸ்

facebookliteமொபைல் மூலம் ஃபேஸ்புக் பார்க்கும் வழக்கம் உடையவர்கள் சிலசமயம் மெதுவான இண்டர்நெட் கனெக்ஷன் காரணமாக வெறுப்பாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். இன்டர்நெட் கனெக்சன் கொண்டவர்கள், செல்போனில் குறைவான மெமரி உள்ளவர்கள், 2 ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆகியோர்கள் இதுபோன்ற பிரச்சனைக்கு ஆளாவதை  கவனித்த ஃபேஸ்புக், இவர்களுக்கென ஒரு அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ஃபேஸ்புக் லைட் (facebook lite).

இந்த அப்ளிகேசனை நமது ஆண்ட்ராய்டு மொபைலில் டவுண்லோடு செய்துகொண்டால், பேஸ்புக்கை எளிமையாகவும், துரிதமாகவும் உபயோகிக்கலாம். இந்த அப்ளிகேஷன் 1 எம்பிக்கும் குறைவான இடத்தை தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

மெதுவான இண்டர்நெட் கனெக்சன் இருந்தாலும் வேலை செய்யும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நியூஸ் பீட், ஸ்டேடஸ் அப்டேட், புகைப்படங்கள், நோட்டிபிகேஷன் ஆகியவற்றைப் பார்க்க முடியும். அதேநேரம் வீடியோக்களை பார்க்க முடியாது. இந்த அப்ளிகேஷன் முதல்கட்டமாக ஆசியாவில் இந்தியா உள்பட சில நாடுகளில் மட்டுமெ ஃபேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply