2 மணி நேரத்தில் 150 பில்லியன் டாலர் இழப்பு: சரிவை நோக்கி ஃபேஸ்புக்

2 மணி நேரத்தில் 150 பில்லியன் டாலர் இழப்பு: சரிவை நோக்கி ஃபேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் இரண்டே மணி நேரங்களில் 150 பில்லியன் டாலரை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக அதிர்ச்சி தரும் செய்தி வெளிவந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் நேற்று மாபெரும் வீழ்ச்சியைக் கண்டதாகவும், இதனையடுத்து அந்நிறுவனம் இரண்டே மணி நேரத்தில் 150 பில்லியன் டாலர் தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இழப்பு, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பைவிட அதிகமாகும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் 15.8 பில்லியன் குறைந்துள்ளது. இதனால் அவரது சொந்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்குக் கீழே சென்றுவிட்டது.

அண்மையில் பேஸ்புக் தனது புதிய பயனாளர்கள் எண்ணிக்கையின் உயர்வு மிகவும் மந்தமடைந்துவிட்டதாக அறிவித்தது. இதன் எதிரொலியாகவே அந்நிறுவனத்துக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply