ஃபேஸ்புக் நிறுவனரை அதிருப்தி அளிக்க செய்த டிராய் அறிவிப்பு

ஃபேஸ்புக் நிறுவனரை அதிருப்தி அளிக்க செய்த டிராய் அறிவிப்பு
facebook
நெட் நியுட்ராலிட்டியை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என தொலை தொடர்பு நெறிமுறையாளரான ட்ராய் உறுதிபட அறிவித்துள்ளதால் இந்த அறிவிப்புக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்த அறிவிப்பு எங்களுக்கு அதிருப்தியளிக்கிறது, மக்களை இணையத்தின் மூலம் இணைப்பதே எங்கள் நோக்கம். ட்ராயின் முடிவு இதற்கு தடையாக இருக்கும். இந்தியாவின் கிராமங்களை இணைக்கும் எங்கள் செயலுக்கு இது போன்ற விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கும். உலகில் 38 நாடுகளில் 19 மில்லியன் மக்களை இணைப்பில் வைக்க உதவியுள்ளோம். இந்தியாவையும் இதில் இணைக்கவே இந்த முயற்சியை நாங்கள் செய்தோம்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனரே அதிருப்தி தெரிவிக்கும் அளவுக்கு ட்ராய் சொல்லும் விதிமுறைகள்தான் என்ன? அவற்றை இப்போது பார்ப்போம்:

1. வழங்கும் தகவலுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றி அமைப்பதோ அல்லது வழங்கும் சேவைகளில் பாகுபாட்டையோ நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தக்கூடாது.

2. சேவைகளில் ஒரு சில சேவைகளுக்கு ஒரு கட்டணம் மற்ற சேவைகளுக்கு வேறு கட்டணம் என்ற நிலைப்பாட்டை கொண்டு செயல்படக்கூடாது. மேலும் தனி நபர் அல்லது நிறுவனத்துடன் இணைய சேவையை வழங்க அதன் விதிமுறைகளை மாற்றி அமைக்க ஒப்பந்தங்களை செய்யக் கூடாது.

3. நெருக்கடி காலங்களில் சேவையின் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

4.இந்த விதிமுறைகளை ட்ராய் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யும்.

இந்தியாவில் ஒருவர் மாதம் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இன்னொருவர் 10 MB டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால் இணைய வேகம், கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. பயன்படுத்தும் டேட்டா அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுமே தவிர அடிப்படை கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்பதுதான்.

ஆனால் ஃபேஸ்புக்கின் ப்ரீ பேசிக்ஸ், ஏர்டெல் ஜீரோ ஆகிய திட்டங்கள் இந்த கருத்துக்கு முரண்பாடானவை. இவை ஒரு குறிப்பிட்ட சேவையை மட்டுமே இலவசமாக வழங்க முடியும் என்று கூறி வருகின்றன. இதனால் மற்ற சேவைகள் பாதிக்கப்படவும, மக்கள் கூடுதல் கட்டணம் அளித்து இணையத்தை பயன்படுத்தும் சூழலை உருவாக்கும் என்ற பயம் அனைவருக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply