ஃபேஸ்புக் போஸ்டை இனி பிரைவேட் மெசேஜிலும் பகிரலாம்..!

facebook-msg1-350x250

‘நாள் முழுக்க சாப்பிடாமல் கூட இருப்போம்… ஆனால், ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமாட்டோம்’ என்னும் அளவுக்கு ஃபேஸ்புக் மோகம் நம்மில் அதிகமானோரை ஆட்டிப்படைத்து வருகிறது. காரணம், அடுத்தடுத்த புதிய வசதிகளால் வாடிக்கையாளர்களை சலிப்பூட்டாமல் கவர்ந்து வருவதை ஃபேஸ்புக் தனது வாடிக்கையாகக் கொண்டுள்ளதுதான். அந்த வகையில் தற்போது ஃபேஸ்புக் அமைதியாக இன்னும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ஃபேஸ்புக் போஸ்டை உங்களது நண்பர்களின் பிரைவேட் மெசேஜில் இனி பகிரலாம்’ என்பதுதான் அது. இந்த வசதியானது தற்போது வெப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தனிப்பட்ட பயனர்களின் போஸ்ட் அல்லது வேறு பக்கத்தில் உள்ள போஸ்ட் என எது ஒன்றையும், ஒருவர் அல்லது பல நண்பர்களின் பிரைவேட் மெசேஜில் நாம் எளிதாக பகிரலாம்.

எப்படி பகிர்வது?

ஒரு போஸ்டின் கீழ் உள்ள share ஆப்ஷனை கிளிக் செய்ததும் ‘Share Now’, ‘Share’ மற்றும் ‘Send as message’ என்ற 3 தேர்வுகள் இருப்பதை பார்க்கலாம். அதில், Send as message என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் ‘Send This Status’ என்ற பாக்ஸ் ஒன்று தோன்றும். அதில்.. ‘To:’ என்னும் இடத்தில் அந்த போஸ்டை நீங்கள் யாருக்கெல்லாம் பகிர விரும்புகிறீர்களோ அவர்களது ஃபேஸ்புக் பெயரை டைப் செய்யவேண்டும். பின் அதன்கீழே உள்ள ’Say Something about this…’ பெட்டியில் அது குறித்து நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களை டைப் செய்து.. கீழே உள்ள ’Send Message’ என்ற பட்டனை கிளிக் செய்து பகிரலாம்.

இந்த புதிய ஃபேஸ்புக் வசதி தற்போது அப்டேட் செய்யப்பட்ட ஆண்டிராய்ட் அப்ளிகேஷனிலும் உள்ளது. அதில் ‘Send as message’ தேர்வை தேர்வு செய்து விரும்பும் நண்பர்களுக்கு பகிரலாம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இந்த வசதி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வந்துள்ளது. சில பயனர்கள் இந்த வசதியை வெப் மற்றும் மொபைல் ஆப் வழியாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

”இந்த புதிய அப்டேட் செய்யப்பட்ட வசதி இன்னமும் கிடைக்காதவர்கள் இன்னும் சில தினங்கள் காத்திருக்கலாம். ஏனென்றால் பரிசோதனை முயற்சியாக தற்போது இந்த வசதி சில பயனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆகவே உறுதியாக அறிவித்த பின் இந்த வசதியை அனைவரும் பெறலாம்’’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

Leave a Reply