சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் உதவியால் கண்பார்வை இழக்கவிருந்த ஐந்து வயது பெண் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி வருமாறு:
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டிஸ்னிலாண்ட் என்ற நகரில் Claire Woodhouse என்ற பெண், தனது ஐந்து வயது மகளின் புகைப்படம் ஒன்றினை ஃபேஸ்புக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தை பார்த்த பிரபல கண் மருத்துவரும், Claire Woodhouse அவர்களின் நண்பருமான ஒருவர், உடனடியாக Claire Woodhouse அவர்களை தொடர்பு கொண்டு, அவருடைய ஐந்து வயது குழந்தையின் கண், ஒரு பெரிய நோயினால் தாக்கப்பட்டுள்ள அறிகுறி தெரிகிறது என்றும், உடனடியாக ஒரு கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யவும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த Claire Woodhouse, உடனடியாக தனது மகளை கலிபோர்னியாவில் உள்ள கண் மருத்துவர் ஒருவரிடம் சென்று பரிசோதனை செய்ததில், ஐந்து வயது குழந்தையின் இடது கண் மிகவும் பயங்கரமான கண் நோயான amblyopia தாக்கியுள்ளதை கண்டுபிடித்தார். உடனடியாக அந்த குழந்தைக்கு சிகிச்சை தரப்பட்டு அவருடைய கண்பார்வை காப்பாற்றப்பட்டது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வந்திருந்தால் குழந்தையின் கண்பார்வை பறிபோயிருக்கும் என மருத்துவர் கூறியுள்ளார்.
குழந்தையின் கண்பார்வையை காப்பாற்ற உதவி செய்த தனது ஃபேஸ்புக் நண்பருக்கு Claire Woodhouse, தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்தசம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.