கடந்த 10 வருடங்களுக்கு முன் இருந்த இளைஞர்களை விட இன்றைய பேஸ்புக் தலைமுறை இளைஞர்கள் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் மேற்கண்டவாறு இருப்பதாக ஐரோப்பாவைச் சேர்ந்த இணைய இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
11 முதல் 15 வயதுள்ள இளைஞர்களை பேஸ்புக் தலைமுறை என அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இந்த தலைமுறையினர் ஆரோக்கிய உணவுகளான பழங்கள், காய்கறிகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுவதாக தெரிவித்துள்ளது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, உடல் சுத்தம், பாதுகாப்பான உடலுறவு உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களில் கடந்த தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த தலைமுறை சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
போதை வஸ்துகள் பயன்பாடு, புகை மற்றும் மது பழக்கங்கள் இவர்களிடம் குறைவாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வீட்டைவிட்டு வெளியே சென்று விளையாடவோ, வெளிப்பழக்கம் இல்லாமல் இருப்பதை மிக முக்கிய குறையாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் தலைமுறையினர் மின்சாதன பொருட்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றிற்கு அடிமையாகி வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.