ஜெர்மனி ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்.
உலகின் நம்பர் ஒன் சமூக இணையதளமாக விளங்கி வரும் ஃபேஸ்புக்கின் ஜெர்மனி அலுவலகம் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. மேலும் அலுவலகத்தின் சுவரில் டிஸ்லைக் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஜெர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன் தினம் இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 மர்ம நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதாக அந்நாட்டு புலனாய்வு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் ‘ஃபேஸ்புக் டிஸ்லைக்’ என்று எழுதியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறிய ஹாம்பர்க் போலீஸார், இதுகுறித்துவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் கூறினர். இந்தத் தாக்குதலில் ஃபேஸ்புக் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்க குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரர் டோனால்டு டிரம்ப், “அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
English Summary: Facebook’s Germany office was defaced by a group of vandals overnight