அமெரிக்காவில் மிக அதிக அளவு நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘தி க்ரானிக்கைல் ஆஃப் ஃபிலாந்த்ரொஃபி” என்ற பத்திரிகை வருடந்தோறும் அதிக நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் மிக அதிக நன்கொடை கொடுத்தவர்கள் 50 பேர் பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் மற்றும் அவரது மனைவி ப்ரிஸ்ஸிலா சான் ஆகிய இருவரும் சேர்ந்து 970 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கொடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 கொடையாளர்களும் சேர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் 7.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை புதிய நன்கொடையாக வழங்கியுள்ளனர்
2013ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் வழங்கிய நன்கொடை தொகை 181.3 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகும்.