சருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா?

206605a5-7ff7-4eaf-bc7a-bfca2750a970_S_secvpf

ஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு சரும பாதுகாப்பிற்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது.

ஆதலால் தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது “டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல்” மற்றும் “டீப் போர் க்ளென்ஸிங்” என்று இருவகையாகவும் கூறப்படுகின்றது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஃபேஷியல் மிகவும் பயனுள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெய்யிலினால் ஏற்படும் சரும பாதிப்புகள், சருமத்தின் அழுகிய அணுக்கள், முகசுருக்கங்கள், சருமத்தில் மூப்பின் சுவடுகள், முகத்தில் தோன்றும் தேமல்கள் இவை அனைத்தையும் போக்க ஃபேஷியல் ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என கூறினாலும் மிகையாகாது. 25 வயது தொடங்கும் பொழுது சருமத்தில் வயதின் பாதிப்புகள் தோன்ற தொடங்குகின்றன.

ஆக இதுவே ஃபேஷியலை தொடங்க சரியான வயது எனலாம். க்ளென்ஸிங் என்ற சுத்தபடுத்தும் திரவத்தால், முகத்தை சுத்தபடுத்தும் பொழுது, உடனே முகம் அழுக்குகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றது. இது நன்றாக சருமத்தின் ஆழத்தில் ஊடுருவதால் சருமத்தின் ரத்தஓட்டம் சீராக்கபட்டு, மாசுக்களையும், அழுக்குகளையும் உடனே நீங்க செய்கிறது. இதே நேரம் டோனிங் மூலம் புதிய சரும அணுக்கள் உருவாகி முகத்திற்கு உறுதியும், நெகிழ்வும் அளிக்கப்படுகிறது.

சருமம் நன்றாக சுவாசிக்கவேண்டி, “ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்” என்ற பொருளால், அழுக்குகள், அழுகிய சரும அணுக்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. இவ்வாறு செய்கையில், பழைய அழுக்குகள் நீங்கி புது பொலிவும், புத்துணர்வும் சருமத்திற்கு கிடைக்கிறது. இந்த முறையால் அடைபட்ட துவாரங்களை சுத்தபடுத்தி, சருமம் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், பொலிவு பெற ஏதுவாகிறது. ஃபேஷியலின் சுகமான ஒரு பகுதி மசாஜ் ஆகும். ஒரு லயதிற்குட்பட்டு முகத்தில் புரியும் அழுத்தங்களினால் முக தசைகள் இறுக்கம் தளர்ந்து லேசாகின்றன.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றி, முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல் பேணப்படுகின்றது. வெள்ளையாக்க, உறுதியாக்க, விட்டமின் சி நிறைந்த பல மாஸ்குகள் கிடைக்கின்றன. முகத்தின் உபரி எண்ணெய் நீங்க, துவாரங்கள் இறுக்கமாக, சருமத்தில் ஈரப்பதம் சேர்க்க என மாஸ்குகள் பல விதத்தில் பயன்படுகின்றன. மூலிகை மாஸ்குகளும் புதிய சரும அணுக்கள் உற்பத்திக்கு பெரும் உதவி செய்கின்றன.

Leave a Reply