திருவனந்தபுரத்தில் நடிகை நஸ்ரியா திருமணம். ஞாயிறு அன்று வரவேற்பு நிகழ்ச்சி.

nazriya marriageநேரம், நையாண்டி, ராஜா ராணி ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை நஸ்ரியா – நடிகர் பகத் பாஸில் திருமணம் இன்று திருவனந்தபுரத்தில் இனிதே நடைபெற்றது.

பிரபல இயக்குனர் பாசில் மகன் பகத் பாஸில் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் இணைந்து “L for Love” என்ற மலையாள படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டதால் கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இவர்களுடைய திருமணம் இஸ்லாமிய மத முறைப்படி திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்திற்கு மலையாள திரையுலக சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்துகொண்டதால் திருவனந்தபுரம் போலீசார் இந்த திருமண விழாவுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

நஸ்ரியா-பகத் வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற உள்ளது.

Leave a Reply