பொய் செய்திகளை அதிகம் நம்பும் மக்கள்: அமெரிக்க நிறுவனத்தின் அதிர்ச்சி சர்வே
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவாகும் செய்திகளில் உண்மை செய்திகளை விட பொய் செய்திகளை அதிகளவில் மக்கள் நம்புவதாக அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் என்ற நிறுவனத்தின் சர்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மக்கள் உண்மையான செய்தியை விட பொய்யான செய்தியை அதிகமாக நம்புகின்றனர். இதனால் அவர்கள் பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் மிக விரைவாக பகிர்கின்றனர். ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன. உண்மையை விட பொய் செய்திகள் 70 சதவீதம் அதிகமாக பகிரப்படுகின்றன.
இதற்கு முக்கிய காரணம் மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாக செய்திகளை விரும்புகின்றனர். பொய்யான செய்திகள் அவர்களின் ஆவலை தூண்டுகின்றன. அதனால் வருகின்ற செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை பகிர்ந்து விடுகின்றனர். இது போன்ற பொய்யான செய்திகள் நாட்டில் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக தேர்தல் நடைபெறும் வெளிவருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.