பத்து வருடங்களாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம்

பத்து வருடங்களாக இயங்கி வந்த போலி அமெரிக்க தூதரகம்

ghana-embassy-_334sஅமெரிக்க தூதரகம் என்றாலே அனைத்து நாடுகளிலும் கடுமையான பாதுகாப்பில் இருப்பில் நிலையில் ‘கானா’ நாட்டில் கடந்த பத்து வருடங்களாக போலியான அமெரிக்க தூதரகம் இயங்கி விசா வழங்கி வந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இரண்டு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தில் மேலே அமெரிக்க கொடி பறந்து கொண்டிருந்தது. அலுவலகத்தின் உள்ளே அமெரிக்க அதிபர் ஒபாவின் புகைப்படம் மாட்டி பக்கா அமெரிக்க தூதரகம் போல் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த அலுவலகம் போலி என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அதில் பணி செய்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலகத்தில் இருந்து ஏராளமான தஸ்தேவேஜ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தனை வருடங்களாக இந்த அலுவலகம் கொடுத்த விசா, போலி என்பதை எவ்வாறு கண்டுபிடிக்காமல் அமெரிக்க ஊழியர்கள் இருந்தார்கள் என்பது மிகபெரிய கேள்விக்குறியாக உள்ளது.

Leave a Reply