ரஷ்ய அதிபர் தேர்தலில் போலி வாக்குகளா? பரபரப்பு தகவல்
சமீபத்தில் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகைஇயில் 76% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபரானார் புதின். ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், போலி வாக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில் ரஷ்யாவின் ஒரு வாக்குச்சாவடியில் பணியில் இருந்தவர்களே போலி வாக்குகள் பதிவு செய்வது போன்று வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின்போது ஒரு வாக்குச்சாவடியில் பணியில் இருந்தவர்களே போலி வாக்குகள் பதிவிடுவது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டஅது. ஆனால் இந்த வீடியோ எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இருப்பினும் இந்த வீடியோ குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் போலி வாக்குப்பதிவு பதிவு செய்தது உண்மையென்றால் இந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வௌகின்றன.