தேர்தல் பிரச்சார மேடையில் மின்விசிறி விழுந்து விபத்து. உயிர் தப்பினார் லாலு. அதிர்ச்சி வீடியோ

தேர்தல் பிரச்சார மேடையில் மின்விசிறி விழுந்து விபத்து. உயிர் தப்பினார் லாலு. அதிர்ச்சி வீடியோ
lalu
பிகாரில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னாள் பீகார் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் மின்விசிறி திடீரென கழன்று விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் அர்வல் மாவட்டத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு பிரசாரக் கூட்டத்தில், அவரது கட்சி நிர்வாகிகள் மேடையில் அதிகளவில் குழுமியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. அதில் அவர் காயமின்றி தப்பினார்.

இந்நிலையில், கிழக்கு சம்பரன் மாவட்டம், மோதிஹரி தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் லாலு பிரசாத் கலந்து கொண்டார். அந்த மேடையில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு மின் விசிறி சரியாக சுற்றாமல் விழுந்துவிடும் நிலையில் இருந்ததை கவனித்த லாலு பிரசாத் யாதவ், தனது கட்சி நிர்வாகிகளிடம் அந்த மின் விசிறியை நிறுத்துமாறு கூறினார். அவர் கூறிய ஒருசில வினாடிகளில் அந்த மின் விசிறி, மேடையில் இருக்கையில் அமர்ந்திருந்த லாலுவின் வெகு அருகே விழுந்தது. ஒருசில அடி தள்ளி அந்த மின்விசிறி விழுந்ததால், சிறு காயங்களுடன் லாலு உயிர் தப்பினார். ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் கொண்டு அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

https://www.youtube.com/watch?v=BHsZzaDn4r4

Leave a Reply