இந்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் தேவையா? எஸ்.ஏ.சந்திரசேகருக்கு குவியும் கண்டனங்கள்
தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பிரபலம் ஒருவர் கோரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்தப் படம் விமர்சகர்களால் படு மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு கண்டனங்கள் குவிந்து வருகின்றன
இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியபோது ’எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேப்மாரி என்ற திரைப்படம் மிகவும் மோசமாக கதை அம்சத்தை கொண்டுள்ளதாகவும் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் இதுபோன்ற திரைப்படங்களை எவ்வாறு தணிக்கை அதிகாரிகள் தணிக்கை செய்தார்கள் என்று தெரியவில்லை என்றும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரரை இந்த படம் இயக்குவதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்தாலும் தவறில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
சட்டத்தின் பல நுணுக்கங்களையும் சட்டத்திலுள்ள ஓட்டைகளை குறிப்பிட்டு அதிரடி ஆக்சன் படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகரா இதுபோன்ற பாலியல் உணர்வை தூண்டும் படங்களை எடுப்பது? என்று விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்