ரகுராம் ராஜன் கலந்து கொள்ளும் கடைசி நிதிக்கொள்கை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதை அடுத்து இன்று அவர் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இதுவே ரிசர்வ் வங்கி கவர்னராக இவர் கலந்து கொள்ளும் கடைசி கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், ” “ஒரு நாளின் முடிவில் நீங்கள் செய்த வேலை தொடர்பாக திருப்தியாக உணர்தல் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் கவர்னராக வேலை பார்த்தது அற்புதமாக இருந்து, ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்தேன். எப்போதுமே விமர்சனங்கள் இருந்துள்ளது. அதேபோல் வெளியில் தெரியாத பலர் என்னை பாராட்டியும் செய்தி அனுப்புகிறார்கள்” என்று கூறினார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என்றும், சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதமும் 4 சதவீதமாக நீடிக்கும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.