விவசாய கடன் தள்ளுபடியால் தனிநபர் நேர்மை சீர்குலையும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து
தமிழக விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் உபி மாநிலத்தில் ரூ.3000 கோடிக்கும் அதிகமான விவசாயக்கடன்கள் ரத்து என்று அம்மாநில முதல்வர் யோகி அறித்துள்ளார். இந்த நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் தனிநபரின் நேர்மை சீர்குலையும் என்று இந்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார்.
மும்பையில் இன்று நடந்த நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ‘விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் தனிநபரின் நேர்மை சீர்குலையும். விவசாயக் கடன் தள்ளுபடியால் பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படும், வங்கிகளின் நிதி நிலை பாதிக்கப்படும் என்று உர்ஜித் படேல் தெரிவித்தார்.
ரூபாய் மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட கூடுதல் பணப் பரிமாற்றங்களை ரிசர்வ் வங்கி உள்வாங்கி முறைப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.