விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
இதன்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை உடனே தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அளித்துள்ளனர்.
இதனால் தமிழக விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, ‘தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு கடன் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்ரும் அறிவித்துள்ளார்.