இப்பொழுது தெரிகிறதா விவசாயி மகிமை? இனிமேலாவது திருந்துங்கள்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த போது அடுத்த நிமிடமே அனைத்து மக்களும் ஓடியது காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காகதான்
21 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை பலர் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள். ஒருவர் கூட செல்போன் வாங்குவதற்கோ, தொலைக்காட்சி மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள் வாங்குவதற்கோ அல்லது நகைகள் வாங்குவதற்கோ செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது
கொரோனா போன்ற இயற்கை பேரிடர்களின் போது தான் விவசாயிகள் மகிமை அனைவருக்கும் புரிய வைக்கிறது. ஒரு மனிதன் உயிர் வாழ்ந்தால் தான் ஆடம்பரமாக வாழ முடியும். அந்த உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு பொருள் உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை அனைவரும் மனதில் நிறுத்தி பெருமை கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் சார்பில் கோரிக்கையாக வைக்கப்படுகிறது