வங்கி கணக்கில் தவறுதலாக வந்த பணத்தை பிரதமர் தந்த பணம் என்று நினைத்து விட்டேன் என விவசாயி ஒருவர் அப்பாவியாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென 15 லட்ச ரூபாய் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது
இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி அனுப்பியதாக நினைத்து செலவு செய்து விட்டதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பிரதமர் அனுப்பிய பணம் என்று மகிழ்ச்சி அடைந்து அந்த பணத்தில் வீட்டை கட்டி விட்டதாக விவசாய கூறியுள்ளார்
ஆறு மாதம் கழித்து தான் வங்கி அந்த பணத்தை திரும்ப தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய போது இவ்வாறு அதில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது