ஆண்களின் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

224b7e49-21b6-46b0-9ed6-8c01baf122c5_S_secvpf

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது தான் தற்போதைய ஆண்களின் மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. ஆண்களே நீங்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் வேகமாக உங்கள் வயிற்றில் அளவுக்கு அதிகமான தேங்கியிருக்கும்  கொழுப்பை கரைக்க முடியும்.

• தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம். தினமும் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் முடியும்.

• கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

• உங்கள் டயட்டில் சரியான அளவு தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

• தினமும் பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ கொழுப்புச்சத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது. 35 வயதை கடந்தவர்கள் தினமும் காலையில் 3 பாதாம் மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

• வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

• வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியும். மேலும் வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

Leave a Reply