ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவால் மேற்குவங்கத்தில் மூண்ட கலவரம். 144 தடை உத்தரவு

ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவால் மேற்குவங்கத்தில் மூண்ட கலவரம். 144 தடை உத்தரவு

ஃபேஸ்புக்கில் ஒரு மதத்தின் புனித்தலம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்து பதிவானதால் மேற்குவங்க மாநிலமே கலவர பூமியாகியுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள் அன்று ஏற்பட்ட கலவரத்தை அடக்க பிஎஸ்எப் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் 800 பேர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படூரியா, பசீர்ஹத் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஒருசில குறிப்பிட்ட மாவட்டங்கள் முழுவதும் இணைய தள சேவை நேற்றும் முடக்கப்பட்டது

இந்தக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மேற்கு வங்க அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே கோரியுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் நேற்று கூறும்போது, “பசீர்ஹத் தாலுகாவில் கடந்த 4 நாட்களாக மதக் கலவரம் நடக்கிறது. மாநில அரசால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மதவாத அரசியல் காரணமாக திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் எதிரெதிராக செயல்படுகின்றன. அங்கு முதலில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு, இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலைக் கொண்டு அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல” என்று கூறியுள்ளார்.

Leave a Reply