அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்த போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றப்பட்டுவிட்டது,. இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீஸார் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஒருசில இடங்களில் வன்முறையும் நடந்துள்ளது.

இந்நிலையில் அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக அந்தக் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக போராடிய அனைவருக்கும் அலங்காநல்லூர் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.

1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஜல்லிக்கட்டைப் பார்க்க வரும் மாணவர்களுக்கு தனி இடம் ஒதுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply